ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கனவுலகம்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கனவுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது, எப்போதும் உயிர்ப்புடனே இருக்கிறது. நாம் எங்கிருக்கிறோம், எந்த நிலையில் இருக்கிறோம் என்கிற சுய நினைவை கடந்து அது எப்போதும் நமக்குள்ளே செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

பல நேரங்களில் நம்முடைய சுய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் அவை எங்கேனும் ஓர் மறைவைத் தேடி மறைந்துக் கொள்கின்றன.

நம்முடைய சிக்கல்களும், பிரச்சினைகளும் தீர்ந்தப் பிறகு அவை மீண்டும் மெல்லமாய் மேலெழும்ப ஆரம்பிக்கின்றன.

அதைப் பற்றிய புரிதல்கள் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். அல்லது தப்பிக்க முயற்சிக்கிறார்கள். வேறு வழி தேடியாவது அலைகிறார்கள். ஆனால், பலருக்கு இந்த மூன்றும் வாய்ப்பதேயில்லை.

ஆகவேதான் பலருக்கு வாழ்க்கை மீதான பிடிப்பு இருப்பதேயில்லை. அவர்கள்தான் கால நீரில் மூழ்கி போய்விடுகிறார்கள்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (6-Dec-14, 6:13 pm)
பார்வை : 61

மேலே