வாய்தா ராணி

வாய்தா ராணி
உங்க பக்கத்து வீட்லெ குடியிருக்காங்களே அந்த அம்மா பேரு என்னங்க?
அவ பேரு ராணி.
இல்ல அவுங்களப்பத்தி இந்தப் பகுதிலெ யாரக் கேட்டாலும் ”யாரு அந்த வாய்தா ராணியா’ன்னு கேக்கறாங்க? ஏன் அது மாதிரி சொல்லறாங்க.
அதுவா அது ஒரு பெரிய கதை. அந்தப் பொம்பள இந்தப் பகுதிலெ குடியிருக்கும் எல்லார்கிட்டயும் ரண்டாயிரம் மூவாயிரம்ன்னு பல வருஷங்களுக்கு முன்னாடி கைமாத்தாப் பணம் வாங்கினா. இன்னும் யாருக்கும் ஒரு பைசாக்கூடத் திருப்பித் தரல. கேட்டா எனக்கு இன்னும் ஆறு மாசம் வாய்தா கொடுங்க. கண்டிப்பா உங்க பணத்தைத் திருப்பித் தர்றேன்ன்னு சொல்லறா. பல வருஷமா இதே கதை தான். அதுக்காக அவ மேல கேசா போடமுடியும்? ஏதோ அவள வாய்தா ராணின்னு கூப்பிட்டு ஆறுதலடைஞ்சிக்கிறோம்.