சமூக வலைத்தளம்

சில்லென்று வீசும் காற்றில் எம் சுவாசமும் கலந்து
சிறகடிக்கும் இணையத்தளத்தில் எம் எண்ணமும் கலந்து
இதமான வாழ்வாய் என்னும் இதயம்
வலைத்தள விரிவுடன் உலகத்தின் விரிவும்
சமூக நன்மைக்கே வலைத்தள கண்டுபிடிப்பு
இன்று சமூக சீர்கேட்டிர்க்கே வழிவகுக்கிறது .
பட்டாம் பூச்சி சிறகடிப்பதுபோல
பாவமும் சிறகடிக்கிறது .
பண்பாய் பயன்படுத்தினால்
பட்டாம் பூச்சிபோல பறந்திடலாம்
பட்டங்கள் பெற்றிடலாம்
பாரினில் உயர்ந்திடலாம் .
சமூகமே உன் எண்ணத்தை தெளிவுபடுத்து
வலைத்தள நன்மையை நினைத்திடு
வன்முறையை உடைத்திடு
சமூகத்திலே முன்னேறிடு .