இன்றே வந்து விடு

இறுதி வரை
இல்லறம் நடத்த
இன்பமாய் அழைக்கிறது
என் இதயம் உன்னை...

இன்று போல் என்றும்
வாழ்வதை விட..இருக்கும் வரை
இனிமையாய் வாழ்ந்திடுவோம்
நாம் இறுதி நாள் வரை..

இன்னல்கள் எத்தனை வந்தாலும்
இடித்தே தகர்த்தி விட்டு
இருப்பதை வைத்து கொண்டு
இனிமையாய் வாழ்ந்திடுவோம்.

இணைந்தே வாழ்ந்திடுவோம்
இல்லறம் தெகட்ட...நல்லறம்
நறுமணமாய் மணக்க இன்றே
வந்து விடு.என்னுடன் நீ..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (3-Dec-14, 1:50 pm)
Tanglish : indrey vanthu vidu
பார்வை : 62

மேலே