மலரே - சகி

@@மலரே @@@

மனதை மயக்கும்
மலரே ...

கண்களை கவரும்
பல வண்ணங்களை
கொண்ட வானவில்லே ...

மங்கையவள் மனதை
கொள்ளைக்கொண்ட மலரே...

மங்கையவள் கூந்தலில்
உன்னை சூட ..

உன்னுடன் சேர்ந்து
அவள் அழகும் கூட ...

காதலன் தன் ஆசை
காதலிக்கு அன்பாக
கொடுக்க....

இரு உள்ளங்களின்
அன்பும் பரிமாற்ற....

தாய் தன் சேய்க்கு
இரு குடிமி போட்டு
அதில் உன்னை சூடி
அழகுப்பார்க்க ...

பனிமலராக காலை
பொழுதில் நீ உன் அழகை
காட்ட....

உன் வாசனையில்
உள்ளம் பறிபோக ...

உன் அழகை சொல்ல
சொல்ல என் உள்ளம்
மயங்குவது ஏனோ ...

எழுதியவர் : சகிமுதல்பூ (3-Dec-14, 4:01 pm)
Tanglish : malare
பார்வை : 68

மேலே