அவன் காதல் மாலையை சூடினான் என் மரண விளிம்பிலே -புவனா சக்தி

அவன் குட்டி குட்டி பார்வை
கட்டி இழுத்தது என் மனதினை.
எட்டி பார்க்கும் சிறு புன்னகையும்
எட்டி அணைத்தது என்னை .

அவன் விழிகளில் மோதி
என் நாணமும் பனியாய் உருகியது.
சுற்றித்திரியும் பூங்காற்றும்
சுள்ளென சுட்டது.


கொட்டித் தீர்க்கும் அருவிப் போல்
சொட்ட நனைந்தது என் மனம்.

கூவும் குயிலின் காதுகளில்
கிசு கிசுத்தது அவன் காதல்.
கொடியாய் நின்ற எனைத்தேடி
இது தான் சேதி என்றது.

பூக்கும் தருணம் வந்தது
பூவின் இதழும் மலர்ந்தது.
சிலையாய் செதுக்கிய என் மனதை
துளாய் ஆக்கியது ஒரு நொடியில் .

ஓசை கேட்டு ஓடி வந்து
குயிலின் இசையில் நனைந்து நின்றேன்.
இசையை கேட்டு சென்றுவிட்டேன்
இமயம் தாண்டி நின்றுவிட்டேன் .

வெட்கப்பட்டு நான் நிற்க
என் வருகைக்காகவே காத்திருந்தான்.

அவன் காதலை கொண்டு செய்தான்
ஒரு பூமாலை.
பூமாலையும் வந்தது
என் மரண விளிம்பிலே.

எழுதியவர் : புவனா சக்தி (3-Dec-14, 3:51 pm)
பார்வை : 94

மேலே