ஏய் தூங்காதப்பா

காலம் கடந்த பாதையில்
காலூன்றி நிற்கும்
கூட்டம்,
நாடகம் போடப்பட்டது
ஒரு காலத்தில்
விடிய விடிய
பார்த்த மக்கள்
இப்போது
தூக்கம் வரும் வரை
பார்த்து விட்டு
செல்கின்றனர் ,
மீண்டும் நாடகம்
போடப்படுகிறது
நாடக நடிகர்கர்கள்
நடிக்கும் போதே
ஏய் தூங்காதப்பா...
ஏய் தூங்காதப்பா...
என்று எழுப்பி
விட வேண்டியதா
இருக்கு ....