எங்கிருந்தாலும்
என்னைப் பற்றிய
எல்லாம் மறந்துபோனேன்
ஆனால் ஏனோ
உன் நினைவுகள் மட்டும்
நாடி நரம்பெல்லாம்
ஓடித் திரிகிறது!
பிரிவென்னும்
நஞ்சு
நெஞ்சை கொன்றாலும்
நினைவென்னும்
தென்றல்
கனவு சாரல்களை
கண்களில் கசிய விட்டு
போகிறது!
இத்தனை வருசங்களில்
ஏங்கித் தவித்தும்
ஒருமுறை கூட
நம் கண்கள்
சந்திக்க
சந்தர்ப்பம் கிட்டவில்லை
ஆனாலும் என்ன
சேமித்து வைத்திருக்கும்
நினைவு தொகுப்புகளை
அசை போட்டவாறே
கடத்திக் கொண்டிருக்கிறேன்
என் மீதி
வாழ்க்கையை.........