இரங்கற் பா

அழகிய வீ ரா Phillip Hughes
கிரிகேட் போட்டியில்
உச்சத்தில் விளையாடியவன்
இரண்டாவது சர்வ தேச
போட்டியில் இரண்டு சதம்
போட்டு இடியென வந்தாய்
மலைக்க வைத்தாய்
விளையாட்டின் விசிறிகளை
நடுவில் துழன்றாய்
மீண்டும் வந்தாய்
எதற்கு அன்று நீ
சதம் அடித்தாய்
மறலி பற்றி மாள்வதற்கா
பூஜ்ஜியத்தில் உள்ளே வந்திருந்தால்
அந்தப் பூஜ்ஜியத்தின்னுள்ளே
உறைந்து இருக்கமாட்டாய்
கவச குண்டலம் இருந்தும்
கர்ணன் மாண்டான்
கவசம் இருந்தும்
நீயும் வீழ்ந்தாய்
யார் பட்ட கண்ணோ இல்லை
எந்த வினை சூழ்ந்ததோ
மாடிருந்தும் கேடு வந்ததோ
இது எங்ஙனம் மூண்டது
தந்தை மகன் புனித ஆவி
என்று இருக்க ஏன்
மகனை விட்டாவியில் புகுந்தாய்
அருமை விளையாட்டுச் செல்வ
சதம் அடிப்பவனடா நீ
ஏன் கால் சதம் அடித்தாய்