முடிந்தால்
அகத்தில் உள்ளதை
முகத்தில்
அறிந்து கொள்ளமுடிந்தால் .?
தேனாக பேசுவோரின்
தீய எண்ணங்களை
இதழில் தெரிந்தகொள்ள முடிந்தால்?
வஞ்சக வலை பின்னுவோரின்
சூழ்சிகளை
விழிகளில் காண முடிந்தால் .?
மாற்று தாயின் வேற்றுமையை
வெளித்தோற்றத்தில்
அறிந்துக்கொள்ள முடிந்தால் .?
இதில் எதுவும் முடிவதில்லை
முடிந்தால்
ஏமாற்றங்களும் தோல்விகளும்
எம்மை நெருங்குவது இல்லை .