அலுவலகத்தில் இன்று -கயல்

மூன்று நாள்
விடுமுறையால்
முதுகெலும்பு
முறியுது

மூச்சு விட நேரமின்றி
ஆந்தை போல்
முழிக்கிது

முற்று பெற நினைத்தாலும்
கடமைகள் கண்முன் நின்று
சிரிக்குது

முதலாளி மொட்டையன்
குறுக்கும் நெடுக்கும்
நடக்கிறான்

கொஞ்சமாய் ஓய்வெடுத்தால்
கோவமாய் முறைக்கிறான்

நாற்காலி நகர சொல்லி
நாசுக்காய் பேசுது

கணினியும் கண் வலி என்று
கைகளிடம் கெஞ்சுது

கடிகார முட்கள் இன்று
மெதுவாக நகருது

கன்னி எந்தன் கண்களில் நீர்
காட்டாறாய் ஓடுது

அலுவலக வேலை என்றால்
அலுப்பு இல்லை என்போரே
அரைநொடி வந்து பாருங்கள்
அலுவலகத்தில் அல்லல் படும்
எங்களை .....!!!!

எழுதியவர் : கயல்விழி (3-Dec-14, 5:27 pm)
பார்வை : 102

மேலே