தொலைந்தேன் மெதுவாக
ஒரு காதல் கோளாறு
என்னில் உருவாக
காரணம் நீயாக -- நான்
தொலைந்தேன் மெதுவாக
எனக்கான கனவுகளை
அறிமுகம் நீ செய்ய
உனக்கான கவிதைகளை
தினம் தினம் படைக்கின்றேன்
ஒன்றை இழந்துதான்
மற்றொன்று கிடைத்திடுமா
மனதினை இழக்கிறேன்
உன் காதல் கிடைத்திடுமா
என் கடைசி நாள் வரை
உன் காதல் துணை வருமா
உயிரை விட துணிந்து நின்றால்
என் குறை தீர்ந்திடுமா
நீயே விடை சொல்லம்மா