ஒரு உண்மை சொல்லவா
ஒரு உண்மை சொல்லவா
இல்லை மௌனம் கொள்ளவா
என் கவிதை அத்தனையும்
உன் பிம்பம் அல்லவா
தினம் தினம் பார்த்தாலும்
தீராத அழகு நீ
தேடி கிடைக்காத தேவலோக
அமிர்தம் நீ
புல்லரிக்கும் கனவுகள்
பொறக்கும் நடு இரவுகள்
தூக்கம் தொலைத்த பொழுதுகள்
இனிக்கும் இன்ப நினைவுகள்;
ஒத்திகை தோற்குமே
உன்முன்னே என்றுமே
மௌனமாய் கெஞ்சுமே
காதல் சொல்ல அஞ்சுமே
தேடுகின்ற கால்தடம்,
என் கவிதைக்கான ஒத்தடம்
தேவை உன் சம்மதம்
ஏன் இன்னும் தாமதம்
வேண்டும் எனக்கு ஒரு வரம்
சொல்லடி ஒரு தரம்
பிடிக்கவா உன் கரம் -- உன் காதல்
வரும் வரை
கொஞ்சம் தான் என்னில் வீரம்