இதயமே என் இதயமே

.."" இதயமே என் இதயமே ""...

உன் துடிப்பில்தான்
என் துடக்கம்
துடிக்க நீ மறந்தால்
என் அடக்கம்
இருவேறு அறைகள்
உன்னில் அதிலே
இருசிறு தடுப்பு,,

சுத்தமும் அசுத்தமும்
உன்னில் சுற்றி சுற்றி
வளம் வரும்,,
சுருங்கி விரியும்
உன் செயலால்
விட்டுக்கொடுத்தலை
உணர்த்தும் விதம்,,,

காதலித்தாலும் வேதனை
உனக்கே
காதலிலும் வேதனை
உனக்கே
இரக்கமில்லையா என
ஏச்சுக்களும்
இரக்கத்தின் உயிர்நாடி
என்றும் ,,,

இதயமே இதயமே நீ
என்னில் துடிக்கும்வரை
என் வாழ்க்கை நீந்தல்
தொடர்ந்திடும்
காரணம் என் வாழக்கை
துடுப்பு நீதான் ,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (4-Dec-14, 6:53 pm)
பார்வை : 445

மேலே