என் தேடல் நீதானே
என் தேடல் நீதானே
உன்னை தேடி தொலைந்தேனே
உன்னை கரம்பிடித்தால்
நான் மீண்டும் கிடைப்பேனே
என் எல்லா கவிதையிலும்
நீதானே வாழ்கின்றாய்
நீ இல்லையென்றால் என் கவி
அத்தனையும் உளறல் ஆகிடுமே
இயல்பாய் இருந்த என்னை
கவிஞன் ஆக்கியவளே
நான் எதை சொன்னாலும்
அது கவிதையாகிடுமே
உன் காதலின் வரம் கிடைக்க
நான் காத்திருக்க
உன் சம்மதம் சொல்லடி
என்னை மீடேடுக்க