உயிர்ஜோதி ஹைக்கூ

*
அணுவுக்குள் அணுவாய்
எங்கே தொடங்கியது?
இன்றும் அணையாத ஜோதி்
*
இரத்தமாய் எண்ணெய்
திரி நரம்பில்
பிரகாசிக்கின்றது தீபம்.
*
உயர் மலையில் சுடர்கிறது
எல்லோரும் தரிசிக்கின்றனர்
எனக்குள் ஒரு ஜீவஜோதி.
*
ஜோதிக்குள் ஜோதியாய்
ஜோதியுள் ஐக்கியமாகிறது
மானுடத்தின் உயிர்ஜோதி.
*
உணர்த்துவது என்ன?
உயிர்த் தத்துவமாய்…
ஒளிர்கின்றது கார்த்திகை தீபம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (5-Dec-14, 4:45 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 122

மேலே