ஸ்ரீயா என் காதலி

என் நன்றியை தெரிவிக்க கடமை பட்டிருக்கிறேன் "மார்க்கிற்கு"
என் முதல் காதல் வார்த்தை நீயடி
அன்பே
இதயங்கள் இணைவது காதலால்
எங்கள் இதயங்கள் இணைத்தோ கவிதையால்
நான் வெறும் வார்த்தைகள் தான்
என்னை கவிதை ஆக்கியவள்
நீ
1000 பேசுவாள் குறுந்தகவல் அனுபயில்
இரவு உறக்கம் மறந்த ஒரு ஹைக்கூ அவள்
அன்று வரை சந்திக்கவில்லை
ஒரு நாள் சிந்தித்தோம் இருவரும்
சந்திக்கலாம் என்று
அவளை கற்பனை செய்து வைத்திருந்தேன் மனதில்
ஒரு ஹைப்ரிட் ரோஜாவாய்
ஆனால் நான் அங்கு கண்டதோ ஒரு கரிசக்காட்டு முல்லை பூவை
செவி வழி கேட்டிருகிறேன் ஆனால் விழி வழி கண்டதில்லை
பெண்ணின் நாணத்தை
அன்று கண்டேன்
என்னை கன்னட கண்களோடு கன்னங்கள் சிவந்து
அவள் சுவரின் பின்னல் சென்று ஒளிந்ததை
நிழலாய் சிறிது என்னை தொடர்ந்து
அருகில் வந்து அமர்ந்தாள்
குனிந்த தலையோடு
அவளும் கல் நெஞ்ச காரிதான்
கெஞ்சினேன் ஒரு முறை என்னை பார் என்று
நிமிர்ந்து பார்க்க சற்று நேரம் ஆனது
முதல் பார்வையல் என் கனவுகளை திருடி செல்லும் அவசரத்தில்
அவள் நினைவுகளை எடுத்து செல்ல மறந்து விட்டால்
ஒரு நொடி என் கைகளை இறுக்கமாக பிடித்தால்
நொடிகள் நிமிடம் ஆனது
நிமிடம் நாட்கள் ஆனது நாட்கள் வாரங்கள் ஆனது
வாரங்கள் மாதங்களாக பூத்தது மாதங்கள் வருடங்கள் ஆனது
எவ்வளவு சண்டை
எவ்வளவு சிரிப்பு
எவளவு கண்ணீர்
இன்னும் அவள் என்னை பிடித்த இறுக்கம் குறையவில்லை
ஒன்று சொல்கிறேன் உனக்காக
வார்த்தைகளை அடுக்க தெரிந்த உன்னை போல ஒரு கவிஞ்சர் இல்லை நன்
என் நடையில் சொல்கிறேன்
நீ இறந்தால் நன் இறந்துவிடுவேன் என்று சொல்ல விருப்பம் இல்லை
நன் இருக்கும் வரை உன்னை இறக்க விட மாட்டேன்
இன்று போல் என்றும் காதலுடன் *(director)*

எழுதியவர் : ஸ்ரீ (5-Dec-14, 10:14 pm)
பார்வை : 92

மேலே