சிரிப்பினில் எனை தொலைத்தேன்
மனதில் எத்தனை பாரம்
முழுதும் மறந்த நேரம்
இவன் ஒற்றை புன்னகையில்
இதமாய் எனை திருடிவிட்டான் !!
இவன் இதழோர சிரிப்பில்
இடைவிடாது பறக்கிறேன்
இன்பத்தில் மிதக்கிறேன்
எனையே மறக்கிறேன் !!
இனி வாழ்வில்
வேறென்ன வேண்டும்
இது போதாதா
இதயமும் எனை கேள்வி கேட்க
இன்பத்தின் இன்னிசையில்
இன்றளவும் எனை தொலைக்கிறேன் !!
( இப்படைப்பு என் இதயத்தோடு ஒன்றி விட்ட என் "அஜித்" (தல) அவருக்காகவே.. என் துன்பத்தினை இவரின் ஒவ்வொரு புகைப்படமும் துடைக்கும், என் மனதோடு இவர் என்றும் பிரியாமல் , தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம் , இப்புன்னகையே என்னை சோகத்தில் இருந்து மீண்டு வர செய்தது, அதற்காகவே இப்பதிப்பு , நன்றி )

