அன்பென்னும் மழை -15-தேவி

(முன் கதை சுருக்கம்: கிராமத்தில் பொங்கல் வைக்க போயிருந்தனர் வருண் மற்றும் வர்ஷுவின் குடும்பத்தினர்.)

இரவு டிப்பனுக்கு இட்லி, சாம்பார், மசால் தோசை என வர்ஷுவும், சுமதியும் சேர்ந்து செய்து பரிமாறினர்.

சுமதி நீயும் உட்கார். உனக்கு நான் தோசை வார்த்து தரேன்.நீ சீக்கிரம் சாப்பிட்டுட்டு உன் குட்டி பையனை பார்த்துக்க.

சரி வர்ஷு என்று அவர்களோடு அமர்ந்தவள் வர்ஷு தோசை வார்த்து கொடுக்க சந்தோசமாய் சாப்பிட்டாள்.

வர்ஷு நீயும் உட்கார் . நான் சாப்பிட்டுட்டேன். உனக்கு பரிமாறுகிறேன் என்று வருநின் அம்மா செல்வநாயகம் எழுந்து கொள்ள , வர்ஷு வருணின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

இல்லை அத்தை இட்லி தானே நானே வைத்து கொள்கிறேன். நீங்கள் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க என்றாள்.

உமாவும் சாப்பிட்டுவிட , செல்வனாயகியோடு எழுந்து வெளியே சென்றமர்ந்தனர்.

அதுவரை பேசாமலே சாப்பிட்ட வருண், வர்ஷுவுக்கு 2 இட்லி எடுத்து வைக்க , என்ன இப்பதான் கண்ணு தெரியுதா?

இல்ல கண்ணம்மா எப்பவுமே என் கண்ணுக்குலையே இருக்கியே.

இப்படி பேசியே கவுதுருங்க.

அப்ப நீ என் பேச்சுல கவுந்திட்டதா ஒத்துகறையா ?

ஏன் அண்ணா சாப்பிடைல அண்ணி கூட சண்டை போடறீங்க.?
சுமதி இது சண்டை இல்ல.
சும்மா விளையாட்டு என்று இருவரும் சிரிக்க. சுமதியும் சேர்ந்து சிரித்தாள்.

நிலா வெளிச்சத்தில் அமர்ந்து சுமதி தன் குழந்தைகளை மடியில் படுக்க வைத்துகொண்டு நிலவை காட்டி கதை சொல்லி கொண்டிருக்க,

சஞ்சு ம்ம் என்று கதை கேட்க , குட்டி பையன் பொக்கை வாய் காட்டி சிரித்தான். அவன் அம்மாவின் சேலையை இழுத்து வாயில் வைத்து கொண்டு கொஞ்ச நேரம், முட்டி போட்டு நின்று கொண்டு நிலாவை வா, வா என்று மழலை மொழியில் அழைத்து கொண்டு விளையாடியதை பார்த்தவளுக்கு கற்பனை விரிந்தது.

தன் மடியில் வருநின் முக சாயலில் ஒரு குட்டி குழந்தை தவழ்வதாய் நினைத்து பார்த்தவளுக்கு பரவசமாய் இருந்தது.மீசையோடு அவன் இப்பை 8 மத குழந்தையாய் இருந்தால் எப்படி இருக்கும் நினைத்தவளுக்கு குபீரென்று சிரிப்பு வர,

ஏய் இப்போது எதற்கு சிறிதாய் என்று வருண் கேட்க , சும்மா தான் என்றான் மழுப்பினாள்.

வர்ஷு உன் வயதில் நான் இரண்டை பெற்று விட்டேன். நீயும் கல்யாணமானதும் தள்ளிபோடாமல் சீக்கிரமாய் எனக்கு ஒரு மருமகளை பெற்று கொடுக்கணும் சரியா? என்று கண்டிசன் போட,

ச்சீ சும்மா இரு சுமதி வெட்கப்பட்டவள் , சரி எனக்கு தூக்கம் வருது நான் ரூமுக்கு போறேன் என்று பொதுவாக சொல்லிவிட்டு தன் ரூமுக்கு சென்று விட்டாள்.

தனி தனி ரூம்கள் ஒதுக்கப்பட்டிருந்தது அனைவருக்கும். உமாவும் செல்வநாயகமும் ஒரே பகிர்ந்து கொண்டு தங்கள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

தன் ரூமுக்குள் வந்தவள் அறையை ஒரு நோட்டம் விட்டாள். பளிச்சென்றிருந்தது. ஒரு கட்டில் மெத்தை. பக்கத்தில் ஒரு சின்ன டேபிள். அதில் பாட்டிலில் தண்ணீர். ஒரு டிவி. ரோஸ் நிறத்தில் ஜன்னலுக்கு திரை சீலை.

பேன் போடாமலே சிலு சிலுவென்று காற்று அறைக்குள் வர, கூடவே தோட்டத்தில் பறிக்காமல் விட்டிருந்த ஜாதி மல்லி, குண்டு மல்லி, செண்பக பூ வாசமும் கலந்து வர, திரை சீலையை நீக்கி வெளியே பார்த்தாள்.

பால் நிலா ஒளியை பொழிய , வானத்து நட்சத்திரங்கள் இறங்கி பூமிக்கு வந்து தோட்டத்தில் பூக்களானதோ என்று எண்ணவைத்தது.




(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Dec-14, 1:40 pm)
பார்வை : 214

மேலே