அன்பென்னும் மழை -14 -தேவி

(முன் கதை சுருக்கம்: பர்சேசுக்கு கோவை கிளம்பினர்)

கோவையின் பிரபலமான அந்த துணி கடைக்குள் நுழைந்தனர். பெண்கள் பட்டு பிரிவுக்கு போன வருணின் அம்மா வர்ஷுவிடம் , என்ன கலர் பிடிச்சிருக்குன்னு சொல்லுடா . அதையே எடுத்திடலாம்.
பிங்க் நிறத்தில் அவள் நிறத்திற்கு எடுப்பாக தெரியும் ஒரு சேலையை செலக்ட் செய்ய அதையே பில் போட கொடுத்தனர்.

அதன் பிறகு உமாவுக்கு, வருணுக்கு, வருணின் அப்பாவுக்கு , அம்மாவுக்கு, குல தெய்வம் கோயிலுக்கு போவதால் ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு, அங்கு தோட்டத்தில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு என பார்த்து பார்த்து எடுத்துகொண்டு கிளம்பினர்.

வருண் போகும் வழியில் , கல்யாண் ஜுவெல்லர்ஸ் போகணும்பா. சரிம்மா என்றவன் கல்யாண் ஜுவெல்லர்ஸ் முன் காரை நிறுத்தினான்.

வா வர்ஷு , உள்ள வா என்று கூட்டி சென்றாள்.
வைர நகைகள் பிரிவுக்கு கூட்டி சென்றாள்.
கடைகாரர் , வாங்க, வாங்க, யாருக்கு பாக்கணும்.
என் மருமகளுக்கு தான். நல்ல டிசயனா காட்டுங்க.

நட்சத்திரங்கள் மின்னுவது போல் பூக்கள் கோர்த்த மாலையாய் இருந்த நெக்லஸ் அனைவருக்கும் பிடித்துவிட அதையே பில் போட்டு எடுத்துகொன்டனர்.

வர்ஷு அதை கொஞ்சம் போட்டுகம்மா என்று வருணின் அம்மா சொல்ல , மறுக்காமல் அணிந்து கொண்டாள்.

பார்த்த வருணின் கண்கள் அகல விரிந்தது. வைரத்தால் அவள் அழகா? அவளால் வைரம் அழகா ? புரியாமல் தவித்தான்.

வாவ் சூப்பர் வர்ஷிதா, என்று அவன் பாராட்ட,

அழகா இருக்கடா என்ற அவன் அம்மா சொல்ல, பாசமான குடும்பத்தில் மகள் வாழ போவதை நினைத்த உமா ஆனந்தத்தில் கலங்கிய கண்களை யாருக்கும் தெரிந்து விடாமல் துடைத்தாள்.

வருண் பார்வையால் அவளை விழுங்க , வெக்கத்தால் சிவந்த முகத்தை எப்படி மறைப்பது என தெரியாமல் விழித்தாள்.

இப்படியே இப்படியே இருந்துவிடகூடாதா ? என்ற பாடல் அவள் மனதில் அப்போது ஓடியது.

சந்தோசமாய் கழிந்தது அன்றைய பொழுது.

அடுத்த நாள் 3 மணி சுமாருக்கு பூஜை பொருட்களோடு அனைவரும் கிளம்பினர். ஆனைமலை பக்கத்தில் உள்ள சின்ன கிராமம். போகும் வழியே முழுவதும் பச்சை பசேலென நெல் வயல் வெளிகள்.

ஆற்றில் வழிந்தோடும் நீர். தென்னை, வாழை, கரும்பு என வர்ஷிதாவுக்கு பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

ஜன்னலோரம் அவள் அமர்ந்து இயற்கையை ரசிக்க , டிரைவர் சீட்டில் இருந்த வருண் கண்ணாடியில் அவளை ரசிக்க அவர்களை பார்த்த அம்மாக்கள் மெதுவாய் சிரிக்க , மாலையில் ஊர் போய் சேர்ந்தனர்.

அந்த பெரிய ஒட்டு வீட்டு முன் காரை நிறுத்தினான் வருண். அழகான ரோஸ் நிற கவுனில் ஒரு குட்டி தேவதை ஓடி வந்து , அம்மா அம்மா இங்க வாங்க வருண் மாமா வந்துட்டாங்க.

அம்மா ஒரு புது அக்கா, பாட்டி எல்லோரும் வந்திருக்காங்க .3 வயதுள்ள சிறுமி சொல்லிக்கொண்டே ஓடி வர சஞ்சு குட்டி வாடா என்று அள்ளி தூக்கி கொண்டான்.


அவள் அம்மா சுமதி , வாங்க பெரியம்மா, வருண் அன்ன, இவங்க உமா அத்தை தானே, அப்படின்னா இவங்க தான் நீங்க சொன்ன வர்சிதா அண்ணியா.


ஹேய் நானும் உன் வயது தான் இருப்பேன் . நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் என்றாள் வர்ஷிதா.

அவள் இடுப்பில் 8 மாத ஆண் குழந்தை தன போக்கை வாய் காட்டி சிரித்தது. கை நீட்டியதும் வர்ஷுவிடம் தாவிக்கொண்டது.

சுமதியின் அம்மா, அப்பா என்று அனைவரும் வந்து விட, அந்த நேரம் தோட்டத்தை பார்க்க போயிருந்த சுமதியின் கணவனும் அண்ணனும் வந்து விட ஒரே கலகலப்பாய் இருந்தது.

உமாவும் அவள் மகளும் வந்திருப்பதை கேள்விப்பட்ட உறவுகள் அவர்களை பார்க்க வீட்டில் கூடி விட்டனர்.

உமா வயது பெண்கள் , உமா உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு, இவள் உன் பெண்ணா , தங்க சிலையை பெத்து வெச்சிருக்கடி என்று கள்ளமில்லாத உள்ளதோடு பேசிவிட்டு , அவள் கணவன் இறந்த துக்கைதை விசாரித்து விட்டு , அவர்களுக்காய் செய்து எடுத்து வந்த பண்டங்களை அன்போடு தந்து விட்டு கண்டிப்பாய் அவர்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்று அன்பு கட்டளை போட்டுவிட்டு சென்றனர்.

சுமதியின் அண்ணன் குடும்பமும் அங்கேயே வசித்தது. அவருக்கும் ஒரு பெண் ஒரு பையன். குழந்தைகளுக்கு புது ஆடைகளை எடுத்து கொடுக்க , அவர்கள் முகத்தில் ஒரே சந்தோசம்.

எதுக்கு அண்ணா என்று சுமதி கேட்க, நாங்க வரதே வருசத்துக்கு ஒரு டைம். அப்ப கூட எதுவும் குழந்தைகளுக்கு எடுக்க வேண்டாம்னா எப்படி.?

இந்தா சுமதி இதுல உனக்கும் உன் மாப்பிள்ளைக்கும் இருக்கு, இதில் சித்தப்பா சித்திக்கு இருக்கு,
அன்போடு வருண் கொடுக்க வாங்கி கொண்டாள்.

கணேஷ் இங்க வாப்பா இதுல உனக்கும், உன் மனைவி குழந்தைகளுக்கு டிரஸ் இருக்கு என்று வருணின் அம்மாவும் வந்து எல்லோருக்கும் எடுத்து கொடுத்து விட்டு, மதியம் சுமதி செய்திருந்த சமையலை ஒரு பிடி பிடித்து விட்டு எல்லோரும் வீட்டின் முன் இருந்த வேப்ப மரத்தடியில் திண்ணையில் அமர்ந்து பெசிகொண்டிருன்தனர்.

அடுத்த நாள் பொங்கல் வைக்க என்னென்ன எடுத்து வைக்க வேண்டும், ஊரில் யார் யாரை கூப்பிட வேண்டும், கல்யாணம் பேசி முடிக்க என்னென்ன ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்று பேசியபடி பொழுது கழிந்தது.

(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (5-Dec-14, 12:48 pm)
பார்வை : 252

மேலே