ஓர் கவியின் வாழ்க்கை தொடர் பாகம் 1-கயல்விழி
கதையில் என் முதல் முயற்சி ..தவறுகள் நிச்சயம் இருக்கும் மன்னித்து விடுங்கள் ...தவறுகளை சுற்றிக்காட்டுங்கள் திருத்திக்கொள்ள முயற்சிக்கின்றேன் நன்றிகள்
என் புள்ளைக்கு நான் செய்யாம யாரு செய்றது .?
அது சரி இதெல்லாம் கேட்க நீ யாரு ?
உழைச்சி போடுற என்ற திமிரா உனக்கு ?
இதற்க்கு மேல் நின்றால் சித்தியின் வார்த்தைகள் கத்தியாய் இதயத்தை
கிழிக்கும் என்று அறிந்த கவி
அந்த இடத்தை விட்டு அகன்றாள்
எவ்வளவோ பொறுத்துக்கொண்ட கவியால் இது மட்டும் முடியாத என்ன .?
தனது அறைக்குள் நுழைந்தவள் கவனத்தை மற்ற முயற்சி செய்தாள்
முடியாமல் மீண்டும் கடந்த காலத்தை மீட்டிப்பார்த்தாள்
அது ஒரு அழகிய கிராமம் பனை மரங்களும் பச்ச பசேலென பறந்தவிரிந்த புல்வெளிகளும்
சுத்தமான காற்றும் சுயநலம் இல்லா மனிதர்களும் வான் நோக்கிய
கோபுரங்களும் வளைந்து நெளிந்த வீதிகளும் வந்தவரை வாழ வைக்கும்
வன்னி என்னும் பெயரில் காண்போரை கவர்ந்தது
இங்கு தான் கஜேந்திரன் (கஜன்) என்னும் பத்திரிகை நிருபருக்கும் கனகாவுக்கும் காதல் ஏற்பட்டது
இருவரும் ஒரே சாதி மற்றும் மதம் என்பதால் காதல் கல்யாணத்தில் முடிந்தது ...இவர்களின் இதய தேவதை தான் கவி .
கூடி வாழ்ந்ததால் குடும்பம் தான் கனகாவிக்கு கோயில்
சகோதரிகள் மூவர் சகோதர்கள் மூவர் அம்மா அப்பா அன்பிற்கு என்ன குறை
குறையின்றி வளர வேண்டும் என குழந்தையே அவள் உயிரானது
கவியும் ஒரு வயதினை நெருங்க
கஜன் கவி பிறந்த நாளைக்கு என்ன செய்யலாம்?
கனகா கேட்கவும்
பெருசா எடுக்க வேணும் அவள் என் தேவதை
கனகாவை மார்ப்போடு
அணைத்தவாறு பதிலளித்தான்
கஜன்
அப்ப நாளைக்கு கிளிநொச்சி போவமே உடுப்பும் எடுத்துக்கொண்டு தேவையான சாமான்களும் வாங்கி கொண்டு வருவம் ..
மகாராணி சொன்னால் மறுக்க முடியுமா?
கொஞ்சலாய் கிண்டலடித்தான் கஜன்
வாழ்வை முடிக்க போகும் விடியலென
அறியாமல் மறுநாள் விடியலை ஆசையோடு வரவேற்றாள் கனகா
கடைகடையாய் ஏறி இறங்கனும் கவிய விட்டுட்டு போ அக்கா
ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளோடு கஷ்ட படும் தங்கை வேணி சொல்லவும்
ஹா ஹா நல்லா இருக்கும் நீ படுற பாட்டுக்கு கவியும் பிறகு தொல்லை தருவாள் கனகா சிரித்தாள்
அப்ப சின்ன தங்கச்சிய கூட்டிக்கொண்டு போ அவள்ட பிள்ளைய குடுத்திட்டு நீங்க கடைக்கு போங்க
வேணியின் சொல் சரி என்று படவே தங்கை கல்யாணியோடு புறப்பட்டார்கள் .போவது கடைசி பயணம் என்று அறியாமல்
உடுப்பு விளையாட்டு பொருட்கள்
என்று விதவிதமாய் வாங்கிய பின்
தங்கச்சி கவிய வச்சிக்கொள்
நானும் அத்தானும் மளிகை சாமான் வாங்கி கொண்டுவாறம்
கவியை கல்யாணி கையில் கொடுத்து விட்டுநகர்ந்தாள்
கனகா கணவரோடு.
நடக்க போவதை அறியாமல் .
தொடரும்....