நவீன வள்ளுவன் வாசுகி
கிணற்றிலிருந்து வாளியில் நீரை இரைத்தபடி தன் கணவனிடம் "காதலிக்கும்போது இருந்த மாதிரி நீங்க இப்போது இல்லீங்க" என்றே புலம்பிக்கொண்டிருந்தாள் மனைவி. கிணற்றுக்குள் பார்த்த கணவன் இப்படி கூறலானான்: நீர் நிரம்பிய வாளியை நீருக்குள்ளிருந்து மேலிழுக்கும்போது எளிதாக இருக்குமே அதுதான் காதல் வாழ்க்கை. அதே வாளியை நீரிலிருந்து மேலிழுக்கும்போது கணக்குமே அதுதான் கல்யாண வாழ்க்கை. இரண்டு வாளியிலும் நீர் எனும் இணக்கம் நிறைந்து இருக்கும் என்பதே உண்மை!!! வாழ்க்கை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது மாற்றம் ஏற்படுவதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதே எதார்த்தம்.