உன் வாழ்க்கை உன் கையில்- சகி
![](https://eluthu.com/images/loading.gif)
@@@நயவஞ்சக புகழ்ச்சி@@@
சில நேரங்களில்
தங்கள் சில எண்ணங்கள்
நிறைவேற வேண்டும் என்ற
எண்ணம் கொண்ட சில
நயவஞ்சகர்கள் வஞ்சக
பாட்டு பாடுவார்கள் ....
பிறர் மனதை காயம் படுத்தாமல்
தன் எண்ணம் ஈடேற ...
மற்றவர்களை முட்டாள்
ஆக்கிவிடுவார்கள் -தன்
வஞ்சக பேச்சில்....
மனமே ஒருபோதும்
மயங்கி விடாதே
வஞ்சக பேச்சிற்கு மட்டும்...
மனமே....
தெளிந்து விடு ...
விழித்து விடு....
உன் பேச்சில்
புரிய வேண்டும்...
வஞ்சக நெஞ்சம்
கொண்ட கயவர்களுக்கு ...
வாழ்வில் கடந்து வந்த
பாதைகள் அனுபவ பாடமே...
வேறுபடுத்தி பார் ...
நல்ல எண்ணம் கொண்ட
மனம் எது உன் உறவில்...
வக்கர எண்ணம் கொண்ட
உறவு எது என்று ...
நீ உணர்ந்தால் போதும் ...
உன் முயற்சியில்
முன்னேற கற்றுக்கொள்....
சுயமாக சிந்திக்க
பழகிக்கொள்.....
நல்லவையும் தீயவையும்
கற்றுக்கொள்...
நீ அனுபவித்த
ஏமாற்றங்கள் யாரிடம்
எப்படி என்று யோசி ....
கற்றுக்கொள் வாழ்க்கை
பாடம் -கயவர்களிடமே....
முயற்சி செய் ..
முன்னேறே வேண்டும்
என்ற எண்ணத்தில் ...
விடா முயற்சி செய்...
வெற்றி மாலை சூடி
வாழ்க்கை பாதை
இனிதே அமையட்டும்
உன் வாழ்க்கைப்பாதை
உன் கையில் ...