ஏழ்மையேஎங்கே நீ

வீதியெங்கும்
விளக்கு ஒளி..
வேடிக்கை
ஊர்வலம்..
வழியெல்லாம்
உருவ தட்டிகள்..
தலைவன்
அழைப்புக்கு
தளராத நெஞ்சங்களின்
அணிவகுப்பு..
பொதுக் கூட்ட மேடையில்
சிங்கத்தின் தனி முழக்கம்..
ஏழ்மையை விரட்டிட!
மறு நாள் காலையில்
காலி பாட்டில்களை
..
பிளாஸ்டிக் பைகளை
பொறுக்கி எடுத்து
விற்றதில் தேறியது..
இரண்டு நாளைக்கு
சாப்பாடு..
ஒரு ஏழைக்கு!

எழுதியவர் : கருணா (6-Dec-14, 4:37 pm)
பார்வை : 213

மேலே