விடுகதைபோல் வந்த துயரம்
விடுகதைபோல் வந்த துயரம்
தொடர்கதைபோல் ஆனதுவே
அலைஅலையாய் வந்த ஏமாற்றம்
மலைமலையாய் திகைக்க வைத்தனவே
வழிவழியாய் வந்த அறிவுரைகள்
நிலைகுலையாது நிற்க வைத்ததுவே
அடுக்கடுக்காய் வந்த நம்பிக்கைகள்
துயர்துடைக்க வழி வகுத்தனவே