நாகூர் கவிஉம் நலம்வா ழியவே

நாகூர் கவியே நயமாய் பொழியும்
நாகூர் கவிஉம் நலம்வா ழியவே
வாகாய் பிறையை வணங்கித் தொழுதே
நீகாண் நிறைவே நினைவாழ்த் துவனே
பேரின் முதலெழுத்து பேசும் நெடிலெழுத்து
சீரிய ஊசிமுனை சேர்ந்திடும்பின்;-காரிகை
பாட்டைக் கணித்தவர்யார்? பாங்குடனே சேர்த்துப்பார்
காட்டுமே நாகூர் கவி
வெண்பா :- வினாவுத்தர சித்திரகவி வகையைச் சேர்ந்தது
பேசும் நெடில்-நா
சீரிய ஊசிமுனை- கூர்
காரிகை பாட்டை கணித்தவர் யார்?- கவி

எழுதியவர் : சு.ஐயப்பன் (6-Dec-14, 5:37 pm)
பார்வை : 237

மேலே