பொம்மை சிங்கம்
"என்ன தைரியம் இருந்தா.. நம்ம ஏட்டு வீட்லயே திருடி இருப்பாங்க..?"
"அப்படியா...?! என்னய்யா சொல்ற..? நிஜமாவா?"
"அட ஆமாய்யா...! அதான் அந்த பஜ்ஜி ரவி இருக்கான்ல...அவன் வேலைதான்! கைவரிசைய காட்டிட்டான்"
"சும்மாவா விட்டீங்க அவனை.."
"அதெப்படி...நம்ம ஏட்டு விவரமானவருல்ல...விடுவாரா சும்மா...! நேத்து பஜ்ஜி ரவிக்கு நடந்த கல்யாணத்துல போயி மொய் பணத்தையெல்லாம் சுருட்டிட்டு வந்துட்டாருல்ல...!பதிலுக்கு பதில் சரியாப் போச்சு...! எப்படி?
"சபாஷ்..! அதுதான பார்த்தேன்!!"