பெண்ணினத்தை காத்து விடு

வரதட்சணை அரக்கர்களே !
பெண்களின் வாழ்க்கையை
கடலுக்குள் முழ்கடிப்பது போல
வரதட்சனைகளுக்குள் முழ்கடிக்காதே
பெண்கள் ஒன்றும் வியாபாரம் இல்லை
திருமண சந்தையில் விலை பேச
அரக்கர்களின் வீட்டார் அநீதியாக
வரதட்சணை கேட்பது தான் வியாபாரம் -இன்றும்
ஓகோவென வளர்ச்சி அடைந்திருக்கின்றது
ஜாதி ,மத ,மொழி எல்லாவற்றையும் விட -இன்று
வரதட்சணை ஒட்டு மொத்தமாக
பெண்களின் வாழ்க்கையை ஆட்டிப் படைக்கின்றது
வரதட்சணை கொடுத்தும் வாழாவெட்டி
வரதட்சணை கொடுக்காமலும் வாழாவெட்டி
இளைஞர்களே சுய சிந்தனை ,சுய கெளவரம் காக்கும்
இளைஞனாக மாறிவிடு
சற்றேனும் வரதட்சணையை குறைக்க
வரதட்சணை போராட்டத்தில்
திணறிக் கொண்டு இருக்கும் பெண்களே
வரதட்சணை கொடுமையை முறிகட்டிவிடு
சட்டம் தருகின்ற வாய்ப்பை முறையாக பயன்படுத்தி!
துணிந்து எழுந்திடு
சிகரத்தையும் நுனி விரலால்
தொட்டு விடு .....
வரதட்சணையை இல்லாது ஒழித்துவிடு ...