ஆண்களே இதற்கும் நீயே பொறுப்பு

..."" ஆண்களே இதற்கும் நீயே பொறுப்பு ""...

குறையல்ல உள்ளத்தின் குமுறல்
ஆண்களே இதற்கும் நீயே பொறுப்பு
புதுமையானவளின் "புகை"ப்படமோ
நவீனயுகத்தின் நாகரீக நங்கையோ
சமயுரிமை சொல்லும் சாட்சியங்கள்,,

நீ சொன்ன புதுமைப்பெண் இவளா!!?
புரிதல்கள் இங்கு தவறாகப்போனதா
வேண்டும் சுதந்திரம் மங்கையரும்
மனிதறேன்றே மார்தட்டி கவிபாடி
மீசை முருக்கியே ரோசம் காட்டிய,,,

எட்டையபுரத்து முண்டாசு கவியே
உனையிவர்கள் முக்காடு கவியாக்கி
மூலையிலே முடிந்து போட்டுவிட்டு
முந்தானையில்லா .... தனை காட்டியே
சுதந்திரமென்றே சொல்லித்திரிகிறார்,,,

பாரதியே பாராயோ நம் "பாரி"னில்
புள்ளிவைத்து கோலமிடுவதை நீ
அடிமைத்தமென்று சொல்லவில்லை
அடக்கிவைத்து அவர்களை ஆளுமை
செய்வதை உடைத்தெறிய நினைத்தாய்

மடையுடந்த வெள்ளமாய் வேகமாய்
சீறிப்பாய்ந்து சிரங்கு சீரழிவுகளாய்
எல்லைகள் தாண்டி எல்லாமும் மீறி
இது குறையல்ல உள்ளத்து குமுறல்
ஆண்களே இதற்கும் நீயே பொறுப்பு...

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (7-Dec-14, 6:48 pm)
பார்வை : 110

மேலே