பொம்மை
![](https://eluthu.com/images/loading.gif)
கோவிலுக்கு செல்லும்
வழியில் தெருக்கடை
பொம்மையை கைநீட்டி
வேண்டுமென்றது குழந்தை ,
வரும்போது
வாங்கிக்கலாம்
என்றார் தந்தை ,
இரவு வீடு வந்ததும்
வாங்க மறந்த பொம்மையை
நினைத்து அழுதது குழந்தை ,
பிள்ளைக்கு பசிக்கிறது
உணவு கொடு என்றார்
தந்தை .