இயற்கை அதிசயிக்கும் மனிதன்
இடும்பை தரும் கரடியென
அறிந்தே தினம் கட்டும் தேன்கூடு
குடிபுகும் பாம்பென அறிந்தே
கரையான் கட்டும் புற்று
ஒரேநாளில் உதிர்வோமென அறிந்தே
தினம் மலரும் பூக்கள்
தான் ருசிக்கமுடியதென அறிந்தே
தினம் கனி கொழிக்கும் மரங்கள்
ஜனனம் மரணம் இயற்கையென அறிந்தே
மனிதர் மரணம் கண்டு மகிழ்வதில்லை
இயற்கையின் படைப்புகள் யாவும் அதிசயமே
இயற்கை அதிசயிக்கும் படைப்பு மனிதன் மட்டுமே
இயற்கைகள் யாவும் பிறர்க்காக தன்னை மாய்க்க
தனக்காக இயற்கையை மாய்ப்பவன் மனிதனே !!