அம்பி மாமா
ஓர விழி ஒன்றால்
ஈரமானது இரு இதயம்
காயங்களில் மேலும் கல்லடி -பலரின்
சொல்லடி வேண்டுமா
இன்னும் இன்னும் காயங்கள் தரும் காதல்
கடலைபோட்டு மடக்குறவன் மத்தியில்
கடல் அளவு ஆழமான காதலை கொண்டு
அளக்கிறவன் நீ
சலவை செய்து உன் இதயத்தை
ஊறவைத்தாலும் காதலில்
சொதப்பும் கெட்டிக்காரனும் நீ
அம்பி மாமா போல உன்
நடை உடை யாருக்கு பிடிக்கும்
உன் சொல்லுரை
ஏதோ ஒன்று மட்டும்
இழுக்குது -உன்
காந்தப் பார்வையை மறைக்கும்
சோடாபுட்டி கண்ணாடியா
தெரியவில்லை
எனைக் கண்டாலே
கண்டுக்காமல் போகும் -உன்
அமைதியும்
படிய வைத்து இழுக்கும் உன்
தலை முடியும்
ஜீன்சுக்கு நீ போடும்
சம்மந்தமில்லா
செருப்பா அதுவும் புரியவில்லை
திக்கி திக்கி நீ கதைக்கும்
பேச்சோ அதுவும் விளங்கவில்லை
எல்லோருக்கு மத்தியிலும் -நீ
சாதரணமாக இருந்தாலும்
அவர்களிடம் இல்லாத - சில
சிறப்புத்தான் எனை -உன்
பக்கம் காதலை பிறக்க வைத்ததோ
காதல் வந்ததும்
நாட்டு மண் போல
காதலில் ஓர் பற்று
உன்னைக் கண்டதும்
இதயம் முழுவதும்
இன்னிசை பூங்கொத்து
நீ தனி என்பதனாலே
என்னையும் உன்னுடன்
இணைத்துக்கொண்டாய்
இதயத்தில் ஒன்றாக .......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
