கேளு மக்கா கேளு

கேளு மக்கா கேளு
பாரு மக்கா பாரு
வாழ்க்கையை ஒரு நொடி யோசிப்பில்

ஒவ்வொரு தோல்வியிலும்
புதிதாய் கண்டறிந்தேன்
எடிசன் மொழிந்தான்

அது உண்மை தான்
நாம் புரிந்து கொண்டால்
நன்மைதான்....

மீன்கள் என்றால் நீந்த வேண்டும்
விண்ணில் எவ்வளவு மீன்கள்
ஏன் நீந்த வில்லை
நமக்கு யோசிக்கவும் நேரம் இல்லை

கடன் வாங்கியே
கடன் கொடுப்போம்
உண்மை தெரியாமலே
பேசி கொண்டு இருப்போம் ...

பாய் விரித்து போடு கடலில்
அது மிதந்தாலும் பாய் மர
கப்பல் ஆகாது...

வானில் சூரியன் இருக்க
வானுக்கு தாகம் எடுக்காது
கடல் நீர் உப்பாய் இருக்க
மீன்கள் பருகாமல் இருக்காது

இடத்திற்கு ஏற்றவாரு மாற்றிகொள்
அனைத்தையும் கற்றுகொள்
அதையும் அளவாகவே தெரிந்துகொள்

குமரியின் கூந்தல்
காற்றில் பறக்க
சூரியன் மறைந்து
உலகம் இருண்டா போகும்....

பூனை பார்வை பார்க்காதே

குதிரை சவாரியில்
குறுக்கே விழுகிறான்
பிழைக்கிறான் ....

நடக்கையில் விழுகிறான்
நொடி பொழுதில் இறக்கிறான்
அதிசயம் கண்டேன் மனித இறப்பில்

விடி வெள்ளியும் வரும்
விடியல் வெள்ளியும் வரும்
உன் கதவை திறந்தால் மட்டும்
தென்படும் .......

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (8-Dec-14, 7:31 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 71

மேலே