ஏமாற்றுக்காரர்கள்

ஆண்கள் பெரும்பாலும்
ஏமாற்றுக்காரர்களே!
பெண்களை
'நிலவு' என்பான்.
உழைத்து உழைத்து
ஓடாய் தேயவைப்பான்.
'பூ' என்பான்
கசக்கி வாடவிடுவான்
'உயிர்' என்பான்
உயிரே போனாலும்
உயிலில் குறியாயிருப்பான்.
'கண்ணே' என்பான்
கண்விழி பிதுங்கும் வரை
காரியம் சாதிப்பான்
'மணியே' என்பான்
'மணி' (பணம்)க்காக
அலுவலகம் அனுப்புவான்.
'என் வீட்டு எஜமானி"
என்பான்.
எல்லா வேலைகளையும் செய்யும்
வேலைக்காரி ஆக்கிடுவான்.
ஒரு பைசா செலவில்லாமல்
காதல்,கல்யாணம் என்று
கன்றாவிகளைப் பேசி
காரியம் சாதிப்பான்.
காதல் பேசி
கள்ளத்தனமாய்
கழன்றுக் கொள்வர் சிலர்.
கல்யாணம் பேசி
காரியம் சாதிப்பவர் சிலர்.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (8-Dec-14, 6:55 pm)
பார்வை : 324

மேலே