திருடி

அடி கொள்ளைக்காரப் பெண்ணே !
இன்னும் நீ என்னிடம்
என்ன திருடப் போகிறாய்

முதலில் நீ என்
கண்களை திருடினாய்
அதன் பின் பார்க்கும்
இடமெல்லாம் உன் முகம்

பின்பு நீ என்
இதயத்தை திருடினாய்
அதன் பின் போகும்
இடமெல்லாம் உன் யாபகம்

நீ என் தூக்கத்தை திருடினாய்
அதன் பின் எண்ண
அலைகளில் உன் ஆக்கிரமிப்பு

நீ என் இலட்சியங்களை திருடினாய்
அதன் பின் உன் பின்னால்
அலைவதே வேலையாயிற்று

நீ என் வார்த்தைகளை திருடினாய்
அதன் பின் உன்னைப் பற்றி
புகழ்வதிலே நாட்கள் நகர்ந்தது

இன்னும் நீ என்னிடம்
என்ன திருடப் பார்க்கிறாய்
என் உயிரையா ?

தயவு செய்து அதை
மட்டும் திருடி விடாதே
அங்கே நீ இருக்கிறாய்

எழுதியவர் : fasrina (9-Dec-14, 10:56 am)
Tanglish : thirudi
பார்வை : 184

மேலே