கருகும் மலர்கள்

..."" கருகும் மலர்கள் ""...

பொய்யாய் உண்மைகள்
அரிக்கும் கிருமிகளாய்
அழிக்கிறது சமூகத்தை
என்றோ நான் கேட்டசெய்தி
குழந்தைக்காய் குறைந்த
கூலிக்கு பொழுதே உழைத்து
மகிழ்வாய் வாழ்ந்ததுபோய்
தான் மகிழ்ந்து வாழ்ந்திட
இன்றோ குழந்தைகளை
பொருளாதார புரட்ச்சி
அனாதையாகி போனது
கல்வி கற்றிட கைகளில்
கரிக்கோல் எடுக்காதே
கருங்கல் சல்லிகளை
சுமக்கும் குழந்தைகள்
நாங்கள் இந்த நாட்டின்
வருங்காலம் குழந்தை
தொழிலாளியாய் நீர்
எமை வாட்டுவதென்ன
கொடுமையின் கோலம்
இப்படியான அடிமைத்தனம்
வேரோடு ஒழியும்வரை
நாட்டின் வருங்காலமென
எங்களை சொல்லேல்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (9-Dec-14, 10:59 am)
Tanglish : karugum malarkal
பார்வை : 639

மேலே