நீலக்குயில் தேசம்10---ப்ரியா

திவ்யாவிடம் பேசிவிட்டு அளவில்லா மகிழ்ச்சியில் இருந்த கயலுக்கு........பின்னிருந்து வந்த அந்த வார்த்தைகள் கோபமூட்டின கோவமாய் திரும்பியவள் அப்படியே அமைதியானாள்......அவளின் இந்த அமைதிக்கு காரணம் அவன் மேல் அவளுக்கு அவளுக்கே தெரியாமல் வந்த காதலா? இல்லை அவனது கனிவான பேச்சா? அந்த காதல் வீசும் பார்வையா?எது என்றே புரியாமல் விழித்தாள்?????

என்ன சொல்றீங்க ராகேஷ் நா...........நான்.......உங்க......என்று வார்த்தைகள் தடுமாறியது கயல்விழிக்கு அவளது தடுமாற்றம் தோழிகளுக்கு நன்றாகவே புரிந்தது "எப்பொழுதுமே நம்ம கயல் நிதானம் தவறியது இல்லடி இதுல ஏதோ இருக்குது" என்று தோழிகள் பேசிக்கொண்டனர்.

பதில் சொல்லாமல் நின்ற கயலை பார்வையால் ஆராய்ந்தான் ராகேஷ் அவனின் பார்வையை இவளால் எதிர்கொள்ளமுடியவில்லை அப்படியே உறைந்து போனாள் இதை கவனித்த ராகேஷ் அவள் மீது ஒரு மௌனப்புன்னைகையை உதிர்த்துவிட்டு........கயல் நீங்க பதில் உடனே சொல்லணும்னு அவசியமில்லை இன்னும் ஒருவாரம் கழித்து சொன்னால் போதும் நான் உங்களுக்கு எந்த இடையூறும் செய்யமாட்டேன் என்று சொன்னவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..........

அவன் அந்த பாதையை விட்டு மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் கயல் தோழிகள் தான் ஏய் கயல் என்னடி அந்த பாதையையே பார்க்கிறாய் உன் மன்னவனையா என்று கிண்டலடித்தார்கள்.....அந்த கிண்டலில் தோழியின் முகம் சிவந்தது ஆனால் இது கோவம் இல்லை நாணத்தால் வந்தது என்பதையும் அறிந்துகொண்டார்கள்......யோசித்தது போதுமடி இப்பவே நேரம் அதிகமாயிடிச்சி வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளலாம் என திவ்யா உட்பட அனைவரும் கிளம்பினர்......!

பஸ்ஸில் ஏறியவர்களுக்கு வேறு வேறு இருக்கை என்பதால் இங்கு நடந்தது பற்றி பேசிக்கொள்ள இயலவில்லை.ஒரு வழியாய் வீடு போய் சேர்ந்தார்கள்.

வீட்டிற்கு சென்ற கயலுக்கு ஆச்சர்யம் அம்மா பொருட்களை எல்லாம் இடம் மாற்றிவிட்டு கயலின் வருகையை நோக்கியிருந்தாள் ஓடி வந்த கயல் பயத்தோடு என்ன அம்மா என்ன ஆச்சி நம்ம திங்க்ஸ் எல்லாம் எங்கே என்று பதற்றமாய் வார்த்தைகளை வீசிக்கொண்டிருந்தாள்.....வீட்டக்காலிப்பண்ணி விட்டு வெளியூருக்கு போறோம்டி உடனே கிளம்பு என்று கயலை ஏமாற்றினாள் அம்மா சுசீலா.........என்னம்மா சொல்றீங்க என்று டல்லாக கேட்டாள் கயல்....என்னடி இந்த ஊர் வேண்டாம் வெளியூருக்கு போகலாமென்று துள்ளி குதிப்பா இப்போ என்ன ஆச்சி உனக்கு என்று அம்மா கேட்க.......?

பதில் சொல்லத்தெரியாமல் நின்றாள் கயல்.......காரணம் என்னவென்றே அவள் புத்திக்கு தெரியவில்லை ஆனால் மனதில் காதலனை நினைக்கிறாள்........பிரமை பிடித்தாற்போல் நின்றகயலை தாயின் குரல் சுயநினைவுக்குக்கொண்டு வந்தது.........

ஏய் சும்மா சொன்னேன் இன்னிக்கு தாத்தா என்னைக்கூப்ப்ட்டு பேசினாங்க நாம இனி தாத்தா வீட்டுலதான் தங்க போறோம் என்று சந்தோஷமாய் சொல்ல இப்பொழுதுதான் கயல் நிம்மதியடைந்தாள் பெருமூச்சுவிட்டுக்கொண்டாள்.

அம்மா அப்போ இனி நாமெல்லாம் ஒரே வீடா என்று சந்தோஷமாய் பட்டாம்பூச்சியைப்போல் பறந்து போய் தன் பாட்டியைத்தூக்கி ஆடினாள் கயல்...கயலின் மகிழ்ச்சியை பார்த்து தாய் இன்னும் மகிழ்ச்சியடைந்தாள்.

இங்கிருந்து 3பேரும் சுசீலாவின் மாமனார் வீட்டிற்கு சென்றனர் பக்கத்தில்லேயே கயலின் தோழிகளின் வீடும் அரவிந்த் வீடும் இருப்பதால் இன்னும் பரவசமானாள் கயல்.

இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அனைவரும் வெளி முற்றத்தில் அந்த நிலவொளியில் சில்லென்ற காற்றில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது சும்மா பேசுவது போல் கயலின் தாத்தா அந்த கனவைப்பற்றி கேட்டார்.........?

என்ன அம்மா நீங்க எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா...?என்று வெட்கத்தில் தலைகவிழ்த்தாள்.அதெல்லாம் சும்மாதான் தாத்தா என்று சமாளித்தாள்.

ம்.......தாத்தாக்கிட்டதானடா சொன்னாங்க என்று செல்லமாய் அவளை வார்த்தையால் சீண்டினார்...அதுமட்டுமல்ல அந்த சாமந்தி பூவின் வாசத்தையும் அவர் உணர்ந்து கொண்டார்.

உண்மையிலேயே அவள் மேல் சாமந்தி பூ வாசம் எப்போதும் இருக்கும் என்பது தெரிந்திருக்கிறது அதனால்தான் அவருக்கு அந்த கனவின் மீது ஒரு வித ஈர்ப்பும் பயமும் தொற்றிக்கொள்ள சாமியாரை பார்ப்பதே சிறந்தது என முடிவு எடுத்தார் அவரது முடிவு யாருக்கும் தெரியாது ரகசியமாய் வைத்திருந்தார்.......!

இரவு முழுவதும் பேசி பேசி நேரம் போனதே தெரியவில்லை கயலுக்கு.........அதிகாலையில் தோழியின் குறுஞ்செய்தி இவளை எழுப்பியது அப்பொழுதுதான் அந்த.....செமினார் நினைவுக்கு வந்தது அவளுக்கு.........ஐயயோ என்று தலையில் கைவைத்தவள் நேரே போய் கணினி முன் உடகார்ந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டாள் ஏற்கனவே அதைப்பற்றி ஓரளவுக்கு தெரிந்ததை மனதிற்குள் அசைப்போட்டுக்கொண்டாள்.
இருந்தும் மனதிற்குள் ஒரு எண்ணம் நிச்சயம் நம்மை வகுப்பு நடத்த சொல்லமாட்டார் என்ற நம்பிக்கையில் கல்லூரிக்கு சென்றாள்.

அரவிந்திடமிருந்து திவ்யாவுக்கும் ராகேஷுக்கும் தகவல் வந்தது....."அவர்கள் முகவரி மாறி வேறேதோ ஊருக்கு சென்றிருப்பதால் இங்கு அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தான்............அரவிந்த் சீக்கிரம் நல்ல செய்தியோடு வந்து விட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டாள் திவ்யா......!

வகுப்பிற்கு சென்றவளின் கண்கள் ராகேஷைத்தேடின ஆனால் அவனை வகுப்பில் காணவில்லை தோழிகளுக்கு விஷயம் தெளிவு பெற இதற்கு இன்று ஒரு முடிவு கட்ட வேண்டுமென கண்களால் பேசிக்கொண்டனர் ஷீபா மற்றும் அஜி........!

இரண்டு வகுப்புகள் இயல்பாய் முடிந்தாலும் கயல் கண்கள் ராகேஷைத்தேடி ஏங்கின.......அந்த சமயம் வகுப்பிற்குள் நுழைந்தார் அந்த ஆசிரியர் அவர் வருகையை பார்த்த அனைவருக்குமே கண்களில் பயம் காரணம் யாரை வகுப்பு நடத்த சொல்லப்போகிறாரோ என்ற பயம்தான் கயலும் தோழிகளும் அதே நிலையில்தான் இருந்தார்கள்........(மற்ற மாணவர்களை விட இவர்கள்தான் அதிக பயத்திலிருந்தனர் செருப்படி மேட்டர்ரை நினைத்து நினைத்து பயத்தில் உறைந்துவிட்டார்கள்....)

ஆனால் அவரோ இயல்பாய்தான் பேசினார் அப்படி ஒரு பயங்கரமான இன்சிடன்ட் நடந்த மாதிரி.....பேச்சாலோ?கண்களாலோ? காட்டிக்கொள்ளவில்லை அதுதான் இவர்களுக்கு பெரும் அதிசயமாய் இருந்தது........!

கையில் புத்தகத்தை எடுத்துவிட்டு.........ஆமா இன்னிக்கு யார் வகுப்பு நடத்த போறீங்க என்று சொல்லி அனைத்து மாணவர்களின் முகத்தையும் நோட்டமிட்டார்..........அனைவரும் குனிந்துதான் இருந்தனர்........"ஹலோ 3rd bench 2nd1 நீங்கதான்" என்று கைகாமிக்க நிமிர்ந்து பார்த்தாள் கயல்.........ஆம் நம்ம கயலேதான்டி ஐயோ என்ன நடக்கப்போகுதோ என்று தோழிகள் பிதுங்கிய கண்களுடன் அமர்ந்திருக்க கயல் எழுந்து அகல உருண்டையான பெரிய மைத்தீட்டிய கண்களை உருட்டிக்கொண்டு நின்றாள்............!





தொடரும்........!

எழுதியவர் : ப்ரியா (9-Dec-14, 4:18 pm)
பார்வை : 183

மேலே