தேவதையின் மறுபக்கம் - 6 - யாழ்மொழி

இடைவெளி கொடுத்திட்ட
இதயத்தின் வலியோடு
இனியவளின் காலங்கள்
கடந்திருக்க...

அலைபேசி வழியாக
அன்பின் பரிமாற்றத்தில்
ஆறுதலடைந்து வந்தாள்
அந்த அற்புதவதி...

மணிக்கொரு அழைப்பும்
மங்கிடாத அன்பு சொற்களும் - அவள்
மனதினை நிறைவுபடுத்த
காதலுக்கோர் கண்ணகியாய்
காத்திருந்தாள் தேவதையும்...

ஒன்பதுமாதங்கள்
ஓடிவிட்ட நிலையில் - அன்று
ஓர்நாள் முழுவதும்
அழைப்பில்லை அவனிடமிருந்து

என்ன ஆகிவிட்டதோ - என்ற
ஏக்கத்திலே தேவதையும்
எண்ணியெண்ணி தவித்திருந்தாள் - அவன்
எண்ணிற்கு தொடர்ந்து முயற்சித்தாள்...

ஆறுநாட்கள் கழிந்தபின்னும்
அழைப்பெதுவும் வரவில்லை
அவன் குரல் கேட்கமுடியாமல்
அவள் நாட்கள் இயல்பாய் நகரவில்லை...

ஆறுதலாய் நானிருந்தும்
அமைதிகொள்ளவில்லை அவள்
காதலனனின் நலமெண்ணி
கலங்கியபடியே இருந்தாள்

அவள் துயரம் பொறுக்காது - அவன்
எண்ணிற்கு நான ழைத்து
அழைப்புமணி கேட்டவுடன்
அவளிடத்தில் கொடுத்துவிட்டேன்

அடுத்த சில நிமிடங்கள்
அரங்கேறிய உரையாடல்கள்
அறிந்திட ஆவலோடு
அவளுக்காக காத்திருந்தேன்

அழைப்பினை துண்டித்து
அமைதிநிறைந்தவளாய் - சிறு
புன்னைகையோடு சொன்னாள்
பேசிவிட்டேன் நன்றி என்று



(தொடரும்)

எழுதியவர் : யாழ்மொழி (9-Dec-14, 6:34 pm)
பார்வை : 107

மேலே