ஒரு விவசாயின் கதறல் - கோபி

மும்மாரி மழை பெய்த
காலம் போச்சு
விளைந்த நிலமெல்லாம்
விலை நிலமாய்
மாறி போச்சு
மழைய எதிர்பார்த்தே
பாதி உசுரு
ஓடி போச்சு
பசியால்
மீதி உசுரு
வாடி போச்சு
உழுத வயலோ
உழன்று போச்சு
உழைத்த உடலோ
மெலிந்து போச்சு
மண்ண கிண்டி
பொழச்ச சனம்
பொன் விளைய
உழைச்ச சனம்
சோறு போட
பொறந்த சனம்
அரைவயிறு கஞ்சிக்கு
கையேந்தி நிற்பதென்ன
உழுவதின்றி
வேற பொழப்பு
அறியலயே என்சாமி..