மதிப்புக்குரிய பெண்களே 0065
பற்கள் தெரிய சிரி -நீ
பருவம் அடையாத வயதில்
வெட்கமின்றி இரு -நீ
புரியாத பருவத்தில்
சத்தமாய்ப்பேசு -உன்
உரிமைக்குரியவரிடம்
பகலிரவைப்பகிர் -உன்
மணாளனோடு மட்டும்
காமப்பசிக்காக கல்யாணம்
பந்தம் செல்லாதே _உன்
வாழ்வை நீயே மெல்லாதே!
ஆடம்பர வாழ்வை விரும்பாதே
ஆடவரோடு சேராதே!
அழகை நம்பாதே _நீ
ஆணவம் கொள்ளாதே
அஞ்சி வாழாதே!
அடி பணிந்து போகாதே!
துணிந்து நில்
எம் ஈழத்து தமிழச்சி போல்
நாணமற்ற நங்கை
நன் நலத்துக்கு கேடு
உன்னைப் போற்றிப்பாட
சமூகத்திடம் நல்லதை தேடு
பெண்ணின்றிப்போனால்-இன்
பூமி இனிமையை பெறாது
பண்பாடு இழந்து -எம்
இனம் வளம் பெறாது
நங்கையை மதியாதவன்
நல்ல ஆணில்லை
நால்வகை குணமற்றவள் -நல்ல
பெண்ணில்லை
அறியாதவரிடம் நகையாதே
நல் பெண்ணினத்தை பகையாதே!!!!!