எப்படி மறப்போம் எப்படி ஏற்போம் 0060
மண் வாசனை இழந்த தேசம்
வாய் விட்டுச்சிரிப்பதை
நிறுத்தி விடச்சொல்லி உபதேசம்
ஆளுக்கொரு கண்டனம்
அடங்கிடாத பேரின வதம்
மண்ணாசை பிடித்தவனிடம்
வாழ்வாதாரம் கேட்டு
பல்லாயிரம் புனிதர்களைக் விதைத்தோம்
வானோர்கள் வாழ்ந்த இடங்களில்
வன நரிகள்
சுகந்தம் நிரைந்த இதயபூமி
சுடுகாடாய்ப்போனது
குடிநீர் பெற மண் தோன்றினால்
மனித எச்சங்கள்
சுய உரிமையை வேண்டினால்
அச்சுறுத்தல்கள்
பல்லாயிரம் துரியோதனன்கள் வாழும் பூமி
அங்கு தமிழனே! சகுனி
நாங்கள் எப்படி மறந்து போவோம்…
எதை ஏற்று ஒன்றினைவோம்…