பெண் பார்க்கும் படலம்

அரும்பாகி பின் மலராகி
மணம்வீசும் தருணம் அதில்

அடக்கம் தானே வர
அகங்காரம் நெருங்க மறுக்க

அகத்தில் அன்போடு
அனைவரையும் கவரதொடங்க ,

ஆரம்பிக்கின்றது பெண் பார்க்கும்
படலம் .!

தரகரென ஒருவர் வர
தாய் தன்மகளை போற்றி புராணம்
பாட ,

புராணம் கேட்ட தரகர் சும்மா
இருப்பாரோ .?

தங்க பையன் தன்வசம் இருப்பதாய்
வண்டி வண்டியாய்
பொய்யுரைக்க

உறுதியானது பெண் பார்க்கும் படலம்.!

வீட்டிற்கு வெள்ளையடித்து
விதவிதமாய் பலகாரம் செய்து
முக்கிய உறவுகளை அழைத்து வந்து
வாசல் பார்த்து காத்திருக்க ..

பட்டுவேட்டி கட்டி பரிதாமாய்
ஒருவரும்
பட்டு புடவையில் பகட்டாய்
ஒருவரும்

புரிந்துகொள்ள முடிகிறது
மாப்பிள்ளையின் பெற்றோர் என ,

அடுத்து குட்டையோ நெட்டையோ
வெள்ளையோ சொல்லையோ
எப்படியோ ஒருவன் அவன் தான் மாப்பிள்ளை,

வந்தவரை பவ்வியமாய் வரவேற்று
நடுவீட்டில் அமரவைத்து

நாக்குக்கு வக்கனையாய்
பச்சியும் சொச்சியும்
பல வித பலகாரமும்
உண்ணகொடுக்கையில்

ஒரு குரல் பொண்ணு எங்க .?

அம்மனுக்கு பட்டுடுத்தி
அலங்காரம் செய்தது போல்

அசைந்து வந்தாள் தேவதையாய்

கண்கள் படபடக்க
கால்கள் கோலமிட நாணி தலைகுனிந்து நமஸ்க்காரம்
செய்து நின்றாள்,

கொலு பொம்மையை பார்ப்பது போல்
கூட்டமே பார்த்து விட்டு

வீட்டு போய் தகவல் சொல்கிறோம்
முகுர்தத்திற்கு நாள் குறிக்க ,

புறப்பட்டு அவர் செல்ல
பொறுமையாய் பெண் வீட்டார்
காத்திருக்க ,

தகவலாய் தரகர் வந்து
பொண்ணு கொஞ்சம் குள்ளமாம்
பையனுக்கு பிடிக்கலையாம் ,


அது போனா என்ன தாயே
வைரமாய் இன்னொன்று
என்வசம் ..

முடிவின்றி தொடர்கின்றது
பெண் பார்க்கும் படலம் ....!!

எழுதியவர் : கயல்விழி (10-Dec-14, 10:12 am)
Tanglish : pen paarkum padalam
பார்வை : 436

மேலே