இலங்கைத் தேர்தல்
அரசியல் கொள்ளை அடித்தே கணக்கில்
வரவிட்டக் கூட்டம் இணைந்து, - உரசிடும்
தீப்பொறி வாசகம் தித்திப்பாய் தந்தெம்மை
சாப்பிடும் கூட்டச் சதி.
அவனவன் பைகள் அழகாய் நிரம்ப
எவனெவனோ வந்தெம்முன் நின்றே - கவனம்
சிதைத்து சிறுபோத்தல் சாராயத் தாலே
உதைத்துப் பிடுங்கும் உணர்வு. (வாக்குரிமை)
விலைகுறைத்து தங்கள் விசுவாசம் கூட்டி
நிலையாட்சி என்றேதம் ஆட்சி - நிலைநாட்ட
மேடை ஒலிவாங்கிச் மூலம் நமைநாளை
பாடைக் கனுப்பும் பசப்பு.
*மெய்யன் நடராஜ் = இலங்கை