பொதிந்த எழுத்துக்கள்

மனசுல நெனப்பு கெடந்து தவிக்குது,
பேசணும்னு உங்கிட்ட...
வாழ்க்க ஓட்டத்துல
ரசிக்கவோ, வேடிக்க பாக்கவோ,
பழச நெனைக்கவோ கூட
நேரமில்லாம -ஒரு
ஜடம் மாதிரி
வாழ்ந்துட்ருக்கன்.

இப்பத்திக்கு என்னோட
சந்தோஷத்த நிர்ணயிக்க
போறது இந்த பணம்
மட்டும் தான்.
எல்லா மனிதர்களின்
மனோபாவமும் இப்படித்தான்.

ஆனா எனக்கு வாழறதுக்கு
தேவையான பணம்
கொஞ்சமா போதும்.
பாசம் நெறைய வேணும்.

நான் சாகும் போது
எனக்காக எத்தன பேரு
அழுதாங்கன்றது
எனக்கு தெரியபோறது இல்ல.
ஆனா நான் வாழும் போது
எல்லாரையும் சந்தோஷமா
பாத்துக்கலாமே.....
கடைசி நொடி வரைக்கும்
சிரிச்சிட்டே இருக்கலாமில்ல...

உறவுகளையும் நட்பையும்
தொலைத்து விட்டு
நான் எதன் பின்னால்
ஓடுவேன்.
மனிதர்களில் பாகுபாட்டை
உண்டாக்கும் பணத்தின்
பின்னாலா..


~ பிரபாவதி வீரமுத்து ~

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Dec-14, 10:36 am)
Tanglish : podindha eluthukkal
பார்வை : 105

மேலே