என் கறைதை சொல்கிறேன்

..."" என் க(றை)தை சொல்கிறேன் ""...
உழைத்து உழைத்து ஓடாய்
கைபிடித்து கறைபடிந்தேன்
மழையிலும் வெயிலிலும்
நிம்மதியாய் நீ உறங்கிடவே
உள்ளிலும் வெளியிலும் நான்
என்றுமே உந்தன் காவல்
வாயிலோரத்து நல்லொரு
வாஞ்சையான ஊழியனாய்,,,
ஆண்டுகள் பலநூறு இந்த
பூமியில் தாங்கிப்பிடித்திடும்
ஆலமரத்தின் விழுதுகளாய்
ஆழமான நம்பிக்கையின்
பாத்திரமான பாசக்காரன்
கறையே படிந்தாலும் என்றும்
கடமையினை தவறாமல்
உனக்காய் உழைத்தேனான்
உருக்குலைந்த என் தேவைகள்
முடிந்து நான் தேவையற்றதால்
தூக்கியெறியும் குப்பையானேன்
உனைப்போற்றி பாதுகாத்தயெனை
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
முதியோரில்லத்தில் மூச்சடைக்கும்
பெற்றோர் நிலையினைப்போல்,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....