கவியாளனின் கற்பனை உலகம் - 2 - சந்தோஷ்

கவியாளனின் கற்பனை உலகம் - 2
-------------------------------------------------

சொப்பனத்தில் மன்னவனை தேடியதேவியாள்
சொப்பனத்தின் களைப்பினால் காதல்
சொர்க்கத்தில் நித்திரை கொண்டவளனாள்
கவியாளனின் கவிதை காதலி.....!


மஞ்சத்தில் கிடந்த பதுமையவளை- காதல்
நெருக்கத்தில் கண்ட கவியாளன்
தொடாமல் கைப்படாமல் கவிவரியால்
தொட்டு எழுப்பிட முயலுகிறான்...!

--------

செம்பூங் கன்னியே.. ! செவ்விதழ் தேவியே..!
இருவிழியினையும் இமையில் மூடினாயோ?
எனை இம்மையில் ஏன் ஆழ்த்தினாயோ ?

நித்திரையென்னடி சொர்ணமே ?
விழிதிரையினை விலக்கி பாரடி...!
உன் மன்னவன் நானடி....!

பாட்டெழுதி... மணவோலை ஏந்தி
பட்டாடையுடுத்தி காதலோடு வந்தேனடி...!
பாரடி பாவையே.... உன் பார்வையில்
உள்ளதடியே... நம் காதல் தேவையே...!

ஆம்பல் பறித்து வரவா..? - உன்
சோம்பல் தீர்க்க மெதுவா யான்
மழைத்தூறல் கவிதை எழுதவா..?

வெண்ணிலவே நாணும் பேரழகியே..! - உன்
பிறைநெற்றியில் உரைநடை எழுதவா?
பொட்டுவைத்த பகுதியில் என்னிதழால்
முத்தகவிதை எழுதி வைக்கவா.. ?

----
உறக்கத்திலுள்ள தலைவியவள்
உணரத்தொடங்கினாள் தலைவனின்
கவிதை புலம்பல் வரிகளால்...!



( தொடரும்..)


- இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (10-Dec-14, 11:44 am)
பார்வை : 194

மேலே