கற்பனை காவியம்
துடிக்கிறதே துடிக்கிறதே
இதயம் துடிக்கிறதே!
என்னை கொன்றாயினும்!!
உன்னை காப்பேனடி(டா)!!!
வெடிக்கிறதே வெடிக்கிறதே
நெஞ்சம் வெடிக்கிறதே!
நீ எங்கே இருக்கிறாய்!!
என்னை கொல்கிறாய்!!!
இமைக்கிறதே இமைக்கிறதே
இமைகள் இமைக்கிறதே!
நீ சென்ற பாதை!!
கண்ணை விட்டு விலகுமோ!!!
அழுகிறதே அழுகிறதே
கண்கள் அழுகிறதே!
நீ இருந்தால் துடைத்திட!!
கைகள் நீளுமே!!!
உயிராய் வந்த நீ!
பிம்பமாய் மாறினாய்!!
உயிராய் இருந்த நான்!
உயிரை இழக்கிறேன்!!
பறக்கிறதே பறக்கிறதே
ஆசைகள் பறக்கிறதே!
கால்கள் கீழேதானே!!
பதியவே இல்லையே!!!
~ பிரபாவதி வீரமுத்து