முந்திரிக்காடு முற்றும்

அண்ணே!....என்னத் தெரியலையா...நாதான் செல்லாயி ....போதும்னே நீ சாட்டையால அடிச்சுக்கிட்டது ...போதும் என பிடுங்கினாள்..

எல்லோரும் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தனர்..தேனுவா இப்டி பேசறதுன்னு ..ஒன்றும் புரியாமல்...

நா தான் அண்ணே ....நா இன்னும் சாகல இந்த தேனு உருவம் தான் இன்னும் உயிரோட இருக்கேன் ...என்ன மன்னிச்சுடு அண்ணே....உங்களையெல்லாம் ஏமாத்திட்டேன் ...போதும்னே ...எனக்காக நீங்க பட்ட கஷ்டம்லாம்.... இந்த படதத ல்லாம் தூக்கி எரிங்கண்ணே...நா தான் உயிரோட இருக்கனே....
என்றாள் ஆவேசமாக....

அம்மா தங்கச்சி..... நா ஒரு பொய் சொன்னதாலதான நீ செத்துப் பொணமா கிடந்த..... எனக்கு இந்த தண்டன வேணும்மா....தடுக்காதம்மா...

அண்ணே ...நா தா உசுரோட இருக்கனே வேண்டாம்னே...என்று கெஞ்சினாள்...தேனுக்கும் டாக்டருக்கும் கண்ணாலம் பண்ணுங்கண்ணே ....அவருதா ஆரிப்பூ ..அவரு உருவத்ல வளந்து நிக்காரு ....இந்த வாட்டி எங்கள எமத்திடாதண்ணே......என்று கத்தியபடியே தரையில் சாய்ந்தாள்..தேனு....

எல்லோரும் இந்த காட்சி கண்டு மனமகிழ்ந்தனர்...உடல் சிலிர்த்தது....என்ன ஆச்சர்யம் ...செல்லாயி இன்னு சாகல....தேனுவா வந்து பொறந்திருக்காளே.... என்று ஆச்சர்யப்பட்டனர் அனைவரும்.....

கூட்டம் கூடியதைக் கண்டு ஆயா, டாக்டர்,.சின்னான் எல்லோரும் ஆச்சர்யத்துடன் நின்றனர்...

தாத்தா....நடந்ததைச் சொன்னார்....செல்லாயி மனம் போல ... டாக்டர்கும் தேனுவுக்கும் கண்ணாலம் பண்ணலாம் புள்ள... என்று ஆயாவிடம் சொல்ல ...அனைவரும் கெஞ்சிக் கேட்டனர் டாக்டரிடம் அவரும் ஒத்துக் கொண்டார்....

திருமணம் இனிதே நிறைவேறியது..முந்திரிக்காடும் இனிப்புடன் சிரித்தது...திருவிழாவும் மிகச் சிறப்பாய் நடந்தேறியது...


முந்திரிக்காடும் முடிந்தது

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (10-Dec-14, 11:16 am)
பார்வை : 214

மேலே