என் காதலின் சுவாசம் 555

உயிரானவளே...

உனக்காக நான் கொண்டு வந்த
வண்ண மொட்டு கூட...

உன்னை கண்டதும்
மலர்கிறது...

நீ தொடவரும்
நேரத்தில்...

வாடிய மலர்கள்
கூட வாசம் வீசுகிறது...

தென்றல் தினம் வீசுவது கூட
உன் சுவாச காற்றுகாகதான்...

வெண்ணிலா தினம் வருவதும்
உன்னை காணத்தான்...

தினம் தினம் நடக்கிறேன்
நீ நடந்த பாதையில்...

உன் பாதம் அருகே
என் பாதம் பதிக்க...

நானும் சுவாசிக்கிறேன்
தினம் உன் மூச்சு காற்றை...

என் காதலும் சுவாசிக்(கும்)க
வேண்டும்...

உயிரே நீ என்னை
நேசித்தால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Dec-14, 7:44 pm)
பார்வை : 313

மேலே