இதுவும் கடவுள் எழுதிய விதி போல

உயிர் போகும் வலி
------------------------------
அண்ணனில் இருந்த
கோபத்தால் செய்த தவறு

இது தானா சேர்ந்த துன்பம் இல்ல
நானா சேர்த்த துன்பம்

ஐயகோ ....:)

கோயில் செல்ல
நடையக் கட்டு என்றான் அண்ணன்

போடா என்று மனிதில் முணுமுணுத்து ....

பேரூந்தில் ஏறினேன்
கடவுளை பார்க்க வருவதற்கு
கடவுள் தந்த தண்டனையாக

ஓடிப் போய் இருக்கை ஒன்றில்
காற்று வீசும் ஜன்னல் ஓரத்தில்
அமர்ந்தேனே

பிள்ளையை கையில் சுமந்த
தாய் வர
நல்ல குணம் ஒன்று என்னைத் தீண்ட
இருக்கையில் அமர இடம் கொடுத்து
மனம் குளிர நின்று வந்தேன்

பூகம்பம் சுழன்று வந்ததைப் போல
உருண்டு வந்ததே ஓர் பெண் பூகம்பம்

நெரிசலோடு நெரிசலாய் வந்ததப்ப -கூட
இப்படி நினைக்கலே

எண்பது கிலோ இருக்கும்
காலால் என் காலை மிதித்த போது
அறிந்து கொண்டது
கால் செத்தே போய் விட்டது
அப்படி ஒரு மிதி

என்னவனை பார்க்கும் போதும் -இவ்வளவு
பெரு மூச்சு விடேல
அழகாய் மித்திது விட்டு
அண்டா குண்டாய் இடம் பிடித்துவிட்டா

பூமியிலே போர்க்களம்
சாமி படைத்த சரித்திரம்
பெண்ணவள் சேர்த்த உடம்பிது
கரம் நிறைய காய்கறி
இன்னும் இன்னும் உண்ண

கடைசியா கோயிலையும் அடைந்தேன்
வலி தாங்கிக்கொண்டு
பாவை இவள் பாதம்
பவளம் போல மின்னுகிறது வீக்கத்தில ..

அண்ணன் பார்த்து சிரிக்க
எதுவும் நடக்காதது போல
நொண்டி நொண்டி நடந்தேன்

அன்று தெளிந்தேன்

.....கண்டதையும் படித்தால் பண்டிதர் ஆகலாம்
.....கண்டதையும் திண்டா பண்டி ஆகலாம் ....

என்ன வலி ......

எழுதியவர் : keerthana (10-Dec-14, 7:37 pm)
பார்வை : 180

மேலே